காட்டு யானை தாக்கி ஒருவர் மரணம்!

0
141

(வாழைச்சேனை நிருபர்)

03கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் காஞ்சலம்குடா பிள்ளையாரடி சந்தியில் காட்டுப்பகுதியில் நேற்று (18) திங்கள்கிழமை மாலை யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிர் இழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று பிற்பகல் காஞ்சலங்குடா பிரதேசத்தில் உள்ள வயலுக்கு தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சமயம் பிள்ளையாரடி சந்தியில் நின்ற யானை துறத்தவும் தந்தையும் மகனும் வேவ்வேறு திசைகளில் தப்பி ஓடியுள்ளனர் அச்சந்தர்ப்பத்தில் தந்தையை துறத்தி யானை தாக்கியுள்ளது காயப்பட்ட தந்தையை எடுத்துக் கொண்டு வாழைச்சேனை ஆதாரா வைத்தியசாலைக்கு வரும் வழியில் அவர் உயிர் இழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கிரான் புலிபாய்ந்தகல் பாடசாலை வீதியை சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான சிவராசா மகேஸ்வரன் (வயது – 58) என்று அடையாளங்கானப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

04 01

LEAVE A REPLY