சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் நாளை மீள ஆரம்பம்

0
147

Sabaragamuwaதற்காலிகமாக மூடப்பட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

விடுதி வசதிகளை பெற்றுக் கொண்டுள்ள மாணவர்கள் இன்று விடுதிகளுக்கு திரும்ப வேண்டும் என சப்ரகமுவ பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விடுதி வசதிகளை பெற்றுக் கொண்டுள்ள மாணவர்கள் இன்று மாலை 6 மணிக்கு முன்னர் விடுதிகளுக்கு திரும்ப வேண்டும் என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை வைரஸ் காய்ச்சலொன்று மாணவர்களிடையே பரவி வருவதாக தெரிவித்து கடந்த 08 ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும் மாணவர்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கே பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

-NF-

LEAVE A REPLY