சுற்றுலா பஸ் வெடித்து சிதறிய விபத்தில் 26 பேர் பலி

0
18

201607191251138256_26-killed-as-Taiwan-tour-bus-bursts-into-flames_SECVPFதைவான் நாட்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்ற தனியார் பஸ் வெடித்து சிதறிய விபத்தில் 26 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.

தைவான் நாட்டின் தலைநகரான தைபே-வில் இருந்து தவோயுவான் பகுதியில் உள்ள பிரதான நெடுஞ்சாலை வழியாக இன்று பிற்பகலில் சென்று கொண்டிருந்த ஒரு சுற்றுலா பஸ், சாலையோர தடுப்பில் மோதிய வேகத்தில் தீப்பற்றி, வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் 26 பேர் பலியானதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் சீனாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் எனவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY