ஏறாவூரில் 500 குடும்பங்களுக்கு இலவச குடி நீர் இணைப்புக்களை வழங்க கிழக்கு முதலமைச்சர் நடவடிக்கை

0
144

(விசேட நிருபர்)

water-supply-415x260மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் சமூர்த்திப் ‪பயனாளிகள் அல்லாத குடும்பங்களுக்கு இலவசமாக குடிநீர் இணைப்புகளை கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதியில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஏ.ஏ.நாசர் தெரிவித்தார்.

இந்த இலவச குடிநீர் இணைப்பினை பெற்றுக்கொள்ள விரும்பும் பயனாளிகள், ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஏறாவூர் பிராந்திய அலுவலகத்தில் பெயர் விபரங்களை பதிவு செய்துகொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.‪

இந்த இலவச குடி நீர் இணைப்பு சமூர்த்திப் பயனாளிகள் அல்லாத 500 பயனாளிகளுக்கு தலா ஒரு வருக்கு 18 ஆயிரம் ரூபாய் வீதம் கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதியொதுக்கீட்டில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மூலம் இத் திட்டத்தினை மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY