(Poem) இலங்கை பணமும் இங்குள்ள செலவும்

0
41

(நிஷவ்ஸ்)

ஐந்து சதம்
Antiqueகாய் ஆகிடிச்சு
பத்து சதம்
பாவித்தவர் பலர் இல்லை
ஐம்பது சதம்
அப்பப்ப காணலாம்
ஒரு ரூபா
உரசுவார் ரீலோட்டை
இரண்டு ரூபா
எல்லோர்க்கும் பிச்சை இட
ஐந்து ரூபா
அறிந்தவர்க்கு தானம் தர
பத்து ரூபா
பத்திரமாய் உண்டியலில்
இருபது ரூபா
இளசுகளின் ரீலோட்
ஐம்பது ரூபா
ஆட்டோக்கு குறைந்த ஹயர்
நூறு ரூபா
நுழைவுக் கட்டணமாய்
இரு நூறு ரூபா
இருந்த தாளைக் காணவில்லை
ஐந்நூறு ரூபாய்
அரை நாள் கூலியாச்சு
ஆயிரம் ரூபா
அன்றாடப் புலாலுக்கு
இரண்டாயிரம் ரூபா
இது கேஸ் நிரப்புதற்கு
ஐயாயிரம் ரூபா
அந்த மாத கரண்ட் தண்ணீர்

சாதாரண மனிதர்களை
ஆதாரமாய் கொண்டதிது
யாதும் யாவருக்கும்
இது பொருந்தாதிருக்கலாம்.

LEAVE A REPLY