அனர்த்தம், காலநிலை மாற்றம் தொடர்பில் கிழக்கிற்கென கொள்கைத் திட்டம் வகுக்க ஆலோசனை!

0
113

(அஸ்லம் எஸ்.மௌலானா)

a0af4eec-eabe-4f2a-96bb-75f9e2991350அனர்த்த அபாய குறைப்பு, காலநிலை மாற்றம், நிலையான அபிவிருத்தி என்பன தொடர்பில் சர்வதேச உடன்படிக்கைகளுக்கமைவாக கிழக்கு மாகாணத்திற்கென கொள்கைத் திடடமொன்றை வரைவது தொடர்பில் நேற்று கிழக்கு மாகாண சபையில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நிர்மாண அமைச்சர் ஆரியவதி கலப்பதி, மாகாண சபையின் பிரதம செயலாளர் டீ.எம்.எஸ்.அபயகுனவர்த்தன ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பிரித்தானிய ஹட்டர்ஸ் பீல்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவர் கலந்து கொண்டு மேற்படி கொள்கைத் திட்டத்தை வகுப்பது தொடர்பிலான பொறிமுறை ஆலோசனைகளை விபரித்தனர்.

இதில் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி ஹேமந்தி குணசேகர, திட்டமிடல் ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் உட்பட கிழக்கு மாகாண சபையின் உயரதிகாரிகள் மற்றும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.

LEAVE A REPLY