காத்தான்குடி டீன் வீதியில் கஞ்சா கட்டுடன் ஒருவர் கைது

0
143

Arrested kky(விசேட நிருபர்)

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடியில் கஞ்சா கட்டு வைத்திருந்த ஒருவரை மட்டக்களப்பு மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் நேற்று(18.7.2016) மாலை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ.ஏ.வஹாப் ஐ.பி. தலைமையில் சென்ற மட்டக்களப்பு மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவு பொலிசார் காத்தான்குடி ஆறாம் குறிச்சி டீன் வீதியில் வைத்து கஞ்சா கட்டு ஒன்றை வைத்திருந்த நபரை கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் வசிக்கும் வீதியில் மட்டக்களப்பு மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவு பொலிசார் நடாத்திய திடீர் சோதனை நடவடிக்கையின் போது 5000 மில்லி கிறாம் கஞ்சா கட்டு ஒன்றுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும் காத்தான்குடி பொலிஸாரிடம் மட்டக்களப்பு மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் ஒப்படைத்துள்ளனர்.

மேற்படி நபரை இன்று(19.7.2016) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY