துருக்கி ராணுவ புரட்சிக்கு ஆதரவு அளித்த 8777 அரசு ஊழியர்கள் நீக்கம்

0
89

turkey_2937945fதுருக்கி ராணுவ புரட்சிக்கு ஆதரவு அளித்ததாக 8777 அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

துருக்கியில் கடந்த 15-ம் தேதி இரவு ராணுவத்தின் ஒரு பிரிவினர் அதிபர் எர்டோகனின் ஆட்சியை அகற்ற முயன்றனர். ஆனால் அந்த ராணுவ புரட்சியை எர்டோகனின் ஆதரவாளர்கள் முறியடித்தனர். இதில் புரட்சி படையைச் சேர்ந்த 100 வீரர்களும் எர்டோகனின் ஆதரவாளர்கள் 208 பேரும் உயிரிழந்தனர்.

அதைத் தொடர்ந்து மூத்த ராணுவ தளபதிகள் உட்பட 3000 வீரர்களும் நீதித் துறையைச் சேர்ந்த 2750 நீதிபதிகளும் கைது செய்யப்பட்டனர். அந்த வரிசையில் மூத்த அரசு அதிகாரிகள் உட்பட 8777 அரசு ஊழியர்களை அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் நேற்று பணிநீக்கம் செய்தது.

இதனிடையே ராணுவ புரட்சியை வழிநடத்திய ஜெனரல்கள் உட்பட 27 மூத்த அதிகாரிகள் நேற்று அங்காரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். புரட்சியில் ஈடுபட்ட வீரர்கள் தனி அறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு வருவ தாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் குற்றம் சாட்டியுள்ளது.

புரட்சியின்போது உயிரிழந்த போலீஸார், பொதுமக்களின் இறுதிச்சடங்கு இஸ்தான்புல் நகரில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் அதிபர் எர்டோகன் பங்கேற்றார். அப்போது, புரட்சி வீரர்களை தூக்கிலிட வேண்டும் என்று ஒருதரப்பினர் கோஷமிட்டனர்.

அவர்கள் மத்தியில் பேசிய எர்டோகன், ஜனநாயக நாட்டில் மக்களின் மதிப்புக்கே முதலிடம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார். துருக்கியில் தற்போது மரண தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடை விரைவில் விலக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

துருக்கி ராணுவ புரட்சிக்கு அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம் மதத் தலைவர் பெதுல்லா குலனே காரணம் என்று அதிபர் எர்டோகன் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இதுகுறித்து பெதுல்லா குலன் நிருபர்களிடம் கூறியதாவது: துருக் கியில் கடந்த கால ராணுவ புரட்சி களின்போது நான் பல்வேறு இன்னல்களை அனுபவித்துள் ளேன். அடிப்படையில் நான் ராணுவ புரட்சிக்கு எதிரானவன். அதிபர் எர்டோகன் ஒரு நாடகத்தை அரங்கேற்றி ராணுவ புரட்சி நடந்ததாகவும் அதை மக்களின் துணையோடு முறிய டித்துவிட்டதாகவும் கூறிவருகிறார். இது உண்மையான ராணுவ புரட்சி என்றால் இப்போது ஆட்சி மாறியிருக்கும். துருக்கியின் நிரந் தர அதிபராக நீடிக்க போலியான ராணுவ புரட்சியை எர்டோகன் நடத்தியுள்ளார். அதன்பேரில் ராணுவம், நீதித் துறை, அரசு நிர்வாகத்தில் தனது எதிரிகளை அவர் அழித்து வருகிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY