காங்கேயனோடை‬ ‪‎பிரதேச‬‪ ‎அபிவிருத்திக்கு‬ ‪‎கிழக்குமாகாண‬ ‪‎முதலமைச்சரின்‬‪ ‎நிதியொதுக்கீடு

0
125

(விஷேட நிருபர்)

Naseer Hafisமட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காங்கேயனோடையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஜெயினுலாப்தீன் நசீர் அகமட் ஒரு கோடியே 55 இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.

கிராமிய அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் காங்கேயனோடை மீனவர் சங்க கட்டிட நிர்மானத்திற்காக 3.5மில்லியன் ரூபாவும், காங்கேயனோடை 155ம் இலக்க கிராமத்திலுள்ள கல்வெட்டு நிர்மானத்திற்காக 2 மில்லியன் ரூபாவும், காங்கேயனோடை பொது மைய்யவாடிய அணைக்கட்டு மற்றும் சுற்று மதில் அமைப்பதற்காக 1.5மில்லியன் ரூபாவும், காங்கேயனோடை பொது விளையாட்டு மைதானத்திற்காக ஒரு மில்லியன் ரூபாவும், காங்கேயனோடை மர்ஹும் எஸ்.எச்.எம்.இஸ்மாயில் வைத்தியர் வீதி புனரமைப்புக்காக 7.5 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான திட்ட அறிக்கைகள் அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளதாகவம் இதன் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் துரிதமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் மற்றும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் மற்றும் மன்முனைப் பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.மதீன் ஆகியோரின் மேற்பார்வையிலும் ஆலோசனையின் பேரிலும் இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற் கொள்ளப்படவுள்ளன.

LEAVE A REPLY