ஆசிரியர் பற்றாக்குறைக்கு, உடனடியாக தீர்வு வேண்டும்: அமைச்சர் நசீர் கல்வியமைச்சிடம் வலியுறுத்தல்

0
184

(சப்னி அஹமட்)

Naseer MPCஆசிரியர் பற்றாக்குறை மிகவும் கஷ்டமாகவுள்ளது இதற்கு உடனடியாக தீர்வு வேண்டும் என கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம், நன்னடைத்தை மற்றும் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நசீர், கிழக்கு மாகான கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபானியிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

அறிவுமைய அபிவிருத்தியை உறுதி செய்து கொள்வதற்காக ஆரம்ப பாடசாலைகள் மற்றும் இடைநிலை பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கல்வியமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிமானிக்கப்பட்ட சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட இறக்காமம் அல்-அஷ்ரப் மத்திய கல்லூரியின் “தொழிநுட்ப ஆய்வு கூடம்” திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (18) இடம்பெற்றது. இதன் போதே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்,

பிரதேசங்களின் கல்வியில் அதிக வளர்ச்சி பெற வேண்டிய தேவை உள்ளது. இதற்காக இறக்காமம், பொத்துவில் பிரதேச பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக தீர்த்து தரமாறு கேட்டுக்கொள்வதுடன், இறக்காமம் கோட்டத்தில் உள்ள 11 ஆசிரியர்கள் பயிற்சிக்கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுடன் இந்த பிரதேசத்தில் உள்ள சில ஆசிரியர்கள் வெளிப்பிரதேசத்திற்கு சென்று கற்பிக்கின்றனர். ஆகவே, இவர்களை இந்த பிரதேசத்திற்கு அனுப்ப வேண்டிய தேவை தற்போது இந்த மாகாண சபைக்கும், கல்வி அமைச்சருக்கும் உண்டு.

ஏறத்தாள் 35 ஆசிரியர்கள் இந்த பிரதேசத்திற்கு உடனடியாக தேவைப்படுவதுடன் இது ஒரு பிந்தங்கிய பிரதேசமாவுள்ளதால், இந்த பிரதேசத்தின் கல்வியின் அக்கறை உள்ளவன் என்ற வகையிலும் இந்த பிரதேசத்திற்கு தேவையான ஆசிரியர்களை கல்வியமைச்சர் அவசரமாக வழங்குவார் என்ற நம்பிக்கையும் என்னிடம் உள்ளது

இத்துடன் பொத்துவில் பிரதேசத்திற்கான ஆசிரியர் பற்றாக்குறை மிகவும் பாரிய ஓர் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது இதனையும் உடனடியாக தீர்க்க வேண்டிய தேவையும் உள்ளது. பொத்துவில், இறக்காமம் உட்பட பல பிரதேசங்களின் ஆசிரியர் பிரச்சினையை கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

அது மட்டும் இன்றி ஏனைய கல்வி வலையங்களில் உள்ள மேலதிக ஆசிரியர்களை உடனடியாக மாற்றம் செய்து ஆசிரியர் பற்றாக்குறையாகவுள்ள பொத்துவில், இறக்காமம் போன்ற பிரதேசங்களுக்கு வழங்க ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அங்கு அமைச்சர் உரையாற்றினார்.

மேலும், அதிபர் இங்கு உரையாற்றும் போது இப்பாடசாலையின் எதிர்கால அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடுகள் சம்மந்தமாக பேசியிருந்தார் அதற்கான யுக்திகளையும் நாம் மேற்கொண்டு இம்முறை எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து இப்பாடசாலையின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன்.

அத்துடன் அது விரைவில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் நிதி பற்றாக்குறை என்பதை விட ஆசிரியர் பற்றாக்குறை மிகவும் கஷ்டமான நிலை இங்கு காணப்படுகின்றது. இதை விரைவில் சீர் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நல்லாட்சி அரசின் ஊடாக கல்வியின் செயற்பாட்டிற்காக பலவகையான திட்டங்களை வகுத்துக்கொண்டு இருக்கின்றார்கள் மாகாண கல்வியமைச்சுடன் மத்திய கல்வியமைச்சு பலவகையான திட்டங்களை மேற்கொண்டு விரைவில் நடைமுறைப்படவுள்ளதுடன் உலக நாடுகள் கூட இன்று கல்வியமைச்சுடன் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். இவர்கள் மூலம் விரைவில் இலங்கையின் கல்வியின் வளர்ச்சியில் வளர்ச்சியடையும் எனவும் தெரிவித்தார்.

இதன் போது கிழக்கு மகாண கல்வியமைச்சர் எஸ். தண்டாயுதபானி, மாகாண சபை உறுப்பினர்களான ஏல்.எல். தவம், ஆரிப் சம்சுடீனுடன் கல்வியதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்வின் போது கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY