முதலமைச்சரிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பையின் நான்கு கேள்விகள்!

0
183

(எம்.ஜே.எம்.சஜீத்)

Uthuma Lebbeஎதிர்வரும் 21.07.2016த் திகதியன்று நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபையின் அமர்வின் போது கிழக்கு மாகாண முதலமைச்சரிடம், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்ளாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பையினால் நான்கு விடயங்கள் தொடர்பான கேள்விகள் கேட்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதாவது,

Chief Minister S. Naseeer Ahamed1. நமது நாட்டிலுள்ள மாகாண சபைகளின் கௌரவ உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முகாமைத்துவ உதவியாளர்களுக்கு அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட சம்பள கொடுப்பனவு வழங்கப்பட்டு வருவதனை கௌரவ முதலமைச்சர் அறிவாரா?

2. கிழக்கு மாகாண சபையின் கௌரவ முதலமைச்சர் கௌரவ தவிசாளர், கௌரவ அமைச்சர்களின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கு மட்டும் அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு வழங்கப்பட்டும் கௌரவ கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கு இதுவரையும் அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்பதனை கௌரவ முதலைமைச்சர் அறிவாரா?

3. கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கு அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு வழங்கப்படுவதற்கான அனுமதி கௌரவ கிழக்கு மாகாண ஆளுனரால் வழங்கப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் கௌரவ மாகாண சபை உறுப்பினர்களின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக கௌரவ முதலமைச்சரினால் சென்ற 21.06.2016ம் திகதி நடைபெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டும் இதுவரை இச்சம்பள கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்பதனை கௌரவ முதலமைச்சர் அறிவாரா?

4. ஆம் எனின், கௌரவ உறுப்பினர்களின் முகாமைத்துவ உதவியாளர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளம் எப்போது வழங்கப்படும் என்பதனை கௌரவ முதலமைச்சர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

போன்ற விடயங்கள் சம்பந்தமாகவே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பையினால் கேள்விகள் கேட்கப்படவுள்ளது.

LEAVE A REPLY