அல்லாஹ் தந்த பரிசுதான் இது: துருக்கி ஜனாதிபதி அர்துகான் உரை

0
258

சதியை வழிநடத்தியவருக்கு மரண தண்டனை?

alha2துருக்­கியில் தனது ஆட்­சிக்கு எதி­ராக கடந்த சனிக்­கி­ழமை நள்­ளி­ரவில் முன்­னெ­டுக்­கப்­பட்டு தோல்­வியில் முடிந்த இரா­ணுவ சதிப் புரட்­சி­யா­னது ”துருக்­கியின் இரா­ணு­வத்தை சுத்தம் செய்­வ­தற்கு அல்லாஹ் தனக்கு தந்த சிறந்த பரிசும் சந்­தர்ப்­ப­மு­மாகும்” என அந்­நாட்டு ஜனா­தி­பதி ரஜப் தையுப் அர்­துகான் தெரி­வித்­துள்ளார்.

இரா­ணுவ சதிப் புரட்சி, மக்கள் ஆத­ர­வுடன் வெற்­றி­க­ர­மாக முறி­ய­டிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து இஸ்­தான்­புல்லில் திரண்ட ஆயிரக் கணக்­கான மக்கள் மத்­தியில் பலத்த பாது­காப்­புடன் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை இந்த சதிப் புரட்­சியை தலைமை தாங்­கிய நடத்­தி­ய­தாக கரு­தப்­படும் அந் நாட்டின் மூன்­றா­வது தரத்­தி­லுள்ள இரா­ணுவ தள­பதி எர்டால் ஒஸ்ட்ருக் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இவ­ருக்கு உச்ச பட்­ச­மாக மரண தண்­டனை வழங்­கப்­ப­டலாம் என சர்­வ­தேச ஊட­கங்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.

இதே­வேளை சதிப் புரட்­சியில் ஈடு­பட்ட பின்னர் பொலி­சாரின் தாக்­கு­த­லுக்குப் பயந்து ஹெலி­கொப்டர் மூலம் கிரீஸ் நாட்­டுக்குத் தப்பிச் சென்ற 8 பேர் கிரீஸ் நாட்டு பொலி­சாரால் கைது செய்­யப்­பட்டு சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டுள்­ளனர்.

அனு­ம­தியின்றி தமது நாட்­டுக்குள் பிர­வே­சித்­த­தாக இவர்கள் மீது வழக்குத் தொட­ரப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையில் இவர்கள் அனை­வ­ரையும் தம்­மிடம் மீள ஒப்­ப­டைக்­கு­மாறு துருக்கி அர­சாங்கம் கிரீஸ் நாட்­டிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

அதே­போன்று இந்த சதிப் புரட்­சியை தூண்­டி­ய­தாக துருக்­கியின் குலான் இயக்கத் தலைவர் பத்­ஹுல்லா குலான் மீது குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளது. கடந்த பல வரு­டங்­களால் அமெ­ரிக்­காவின் பென்­சில்­வே­னியா நகரில் அர­சியல் தஞ்சம் புகுந்­துள்ள இவரே இந்த சதியை வழி­ந­டாத்­தினார் என துருக்கி ஜனா­தி­பதி அர்­துகான் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன் அவரை உடனடியாக துருக்கிக்கு அனுப்பி வைக்குமாறும் அவர் அமெரிக்க அரசாங்கத்திடம் தனது உரையின்போது வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பான விரிவான கட்டுரைகளை 6,7 ஆம் பக்கங்களில் பார்க்கலாம்.

#Vidivelli

LEAVE A REPLY