கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த இருவர் கைது: ஐம்பதாயிரம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை

0
100

(விஷேட நிருபர்)

released_open_jailஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஏறாவூர் ஹிஸ்புல்லாஹ் நகர் கிராமத்தில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட இருவர் ஐம்பதாயிரம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (16) சனிக்கிழமை மாலை ஏறாவூர் ஹிஸ்புல்லாஹ் நகர் கிராமத்தில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த போது இருவர் ஏறாவூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.

வீடொன்றில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த போது சுற்றி வளைத்த ஏறாவூர் பொலிசார் இவ்விருவரையும் கைது செய்ததுடன் ஒருவரிடமிருந்து 4000 மில்லிகிறாம் கஞ்சாவும் மற்றுமொருவரிடமிருந்து 3600 மில்லிகிறாம் கஞ்சாவையும் பொலிசார் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஏறாவூர் ஹிஸ்புல்லாஹ் நகர் கிராத்தினை சேர்ந்தவர் எனவும் மற்றுமொருவர் ஏறாவூர் மிச்சி நகர் கிராமத்தினைச் சேர்ந்தவர் எனவும் ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இவ்விரு சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும் நேற்று (17.7.2016) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இவ்விருவரும் தலா ஒருவருக்கு ஐம்பதாயிரம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY