ஏறாவூர் பழைய பொதுச்சந்தை 12 கோடி ரூபாய் செலவில் நவீனமயம்

0
193

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Naseer Hafisபல தசாப்த காலங்களாக புனரமைப்புச் செய்யப்படாதிருக்கும் ஏறாவூர் பழைய பொதுச்சந்தையை நவீனமயப்படுத்த திட்டம் வகுத்துள்ளதாகவும் இதற்கென சுமார் 12 கோடி ரூபாவை நகர அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கியுள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்று (17) தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவித்த முதலமைச்சர்,

ஏறாவூர் பழைய பொதுச்சந்தையின் தற்போதைய அமைப்பினால் வர்த்தகர்களும், பொதுமக்களும் நுகர்வோரும், சந்தையைச் சூழ வசிக்கும் மக்களும் இடநெருக்கடி, சுகாதாரம் உட்பட மேலும் பல பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து வந்துள்ளனர்.

இந்த பழைய பொதுச்சந்தை, மிக நீண்டகாலமாக எந்தவொரு புனரமைப்பு, மற்றும் அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளப்படாது மிகவும் பின்தங்கிய நிலையிலும், ஒரு பொதுச்சந்தைக்குரிய எதுவித அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலும் காணப்படுவது குறித்து நீண்டகாலமாக வியாபாரிகளும் நுகர்வோரும் உள்ளுராட்சி நிருவாகத்திடம் முறையிட்டு வந்திருந்தனர்.

இதனைக் கருத்திற்கொண்டு நகர அபிவிருத்தி அமைச்சினூடாக சந்தையை நவீன மயப்படுத்தும் திட்டம் உடனடியாக ஆரம்பிக்பபடவிருக்கின்றது. இதற்கென 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நிருமாணப் பணிகள் உடனடியாகத் தொடங்கும்’ என்றார்.

ஏறாவூரின் இரு பள்ளிவாயல்களுக்குச் சொந்தமான காணியில் உள்ள பழைய பொதுச் சந்தை, ஏறாவூர் நகர சபையின் நிர்வாகத்தின் கீழ் இருந்து வருகிறது.

DSC07299 DSC07300 DSC07301 DSC07302 DSC07303 Eravur Market 2

LEAVE A REPLY