இங்கிலாந்து அணியை 75 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

0
162

201607172321009164_1st-Investec-Test-vs-England-Pakistan-won-by-75-runs_SECVPFஇங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 339 ரன்கள் குவித்தது. மிஸ்பா உல் ஹக் சதம் அடித்து அணியின் ரன் குவிப்பிற்கு முக்கிய காரணமாக இருந்தார். அவருக்குத் துணையாக ஹபீஸ் 40 ரன்னும், ஆசாத் ஷபிக் 73 ரன்னும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் வோக்ஸ் 6 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 79.1 ஓவர்கள் முடிவில் 272 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. வோக்ஸ் 35 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். அதிகபட்சமாக குக் 81 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் யாசீர் ஷா 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 67 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அசாத் சபீத் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சர்பராஸ் அகமது 45 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் 5 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

இதனையடுத்து, இங்கிலாந்து அணிக்கு 283 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டது. 4-வது நாள் ஆட்டம் என்பதால் இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. அதேபோல் விக்கெட்டுக்கள் விரைவில் விழும்பட்சத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 207 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட், இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்களையும் சாய்த்த பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசீர் ஷா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது

LEAVE A REPLY