மதுபாவனையில் மட்டக்களப்பு மாவட்டம் மூன்றாமிடம்

0
95

sarack-500x330மட்டக்களப்பு மாவட்டம் மதுபாவனையில் இலங்கையில் மூன்றாமிடத்தில் உள்ளதாக மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் கே. கணேசராஜா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வரும் வழக்குகளில் பெரும்பாலானவை மது தொடர்பான பிரச்சினைகளாகவே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் உருவான ‘மதுவை வெற்றி கொள்வோம்’ எனும் திட்டத்தின் கீழ் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

LEAVE A REPLY