ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தொழிற் சங்கம் முதல் தடவையாக புல்மோட்டை கணிய மணல் தொழிற்சாலையில்…

0
161

f13129e2-8aa2-46d9-b18a-0679134ee234(M.T. ஹைதர் அலி/ அகமட் இர்ஷாத் )

கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சின் கீழ் புல்மோட்டை கணிய மணல் தொழிற்சாலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் தலைவரும் நீர் வழங்கள் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையின் கீழுள்ள ஜாதிக சமகி சேவக உர்திய சங்கமய 01.07.2016 ஆந்திகதி முதல் தொழிற் சங்கமாக முதல் தடவையாக பதிவு செய்யபடுள்ளது.

குறித்த அமைப்பினூடாக தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன் அவர்களின் உரிமைகளை பெற்றுகொடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் தொழிற் சங்கத்தினூடாக தாம் முன்னெடுப்பதாக அதன் தலைவர் அ.மு. பாயிஸ் தெரிவித்தார்.

ஏற்கனவே குறித்த தொழிற்சாலையில் பெரிய கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளின் தொழிற் சங்கங்கள் இயங்கி வருகின்றன எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் தெரிவித்தார்.

LEAVE A REPLY