டி20 போட்டிகளில் 1000 ஓவர்கள் வீசி பிராவோ சாதனை

0
93

201607171709534278_Dwayne-Bravo-bowled-1000-overs-in-T20-history_SECVPFவெஸ்ட் இண்டீஸ் அணியில் சிறந்த ஆல் ரவுண்டராக திகழ்பவர் வெயின் பிராவோ. 32 வயதாகும் இவர், 2006-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுகம் ஆனார். 40 டெஸ்ட் மற்றும் 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடிள்ள இவர், உலகளவில் நடைபெறும் டி20 பிரீமியர் லீ்க தொடரில் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார்.

டெஸ்ட் போட்டியில் இருந்த ஓய்வு பெற்ற இவர், ஒருநாள் தொடரில் கடைசியாக 2014-ல் கலந்து கொண்டார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஒருநாள் போட்டியில் விளையாடமல் இருக்கிறார். டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

இவர் இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல்., ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடக்கும் கரீபியன் பிரீமியர் லீக் ஆகியவற்றில் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார்.

ஏராளமான லீக் தொடர்களில் விளையாடி வரும் ஆல் ரவுண்டரான பிராவோ பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். தற்போது டி20 போட்டிகளில் 1000 ஓவர்கள் வீசிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதற்கு முன் 300 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் வீரர் என்றும், 5 ஆயிரம் ரன்களுடன் 300 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் வீரர் என்றும் சாதனைப் படைத்திருந்தார். தற்போது 1000 ஓவர்கள் வீசிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

LEAVE A REPLY