அர்மேனியால் ஜனாதிபதியை பதவி விலக்கோரி துப்பாக்கி முனையில் காவல் நிலையத்தை கைப்பற்றியதால் பரபரப்பு

0
153

201607171908240487_Armenia-opposition-group-takes-hostages-in-police-station_SECVPFஐரோப்பா கண்டத்தில் அஜர்பைஜான் நாட்டையொட்டிள்ளது அர்மேனியா. இந்த நாட்டின் ஜனாதிபதியாக செர்ஸ் சர்கிசியான் உள்ளார். எதிர்க்கட்சி தலைவரான ஸிரைர் செபில்யான் ஆயுதங்கள் வைத்திருந்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இதனால் கோபம் அடைந்த எதிர்க்கட்சியை சேர்ந்த சிலபேர் பயங்கர ஆயுதங்களுடன் தலைநகரரில் உள்ள எரேபுனி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்திற்குள் நுழைந்து அங்குள்ள போலீஸ் காரர்களை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.

இதுகுறித்து அர்மேனியாவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு கூறுகையில் ‘‘பயங்கர ஆயுதங்களுடன் ஒரு குரூப் போலீஸ் நிலையத்திற்கு நுழைந்து அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளது’’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், பிணைக்கைதிகளாக இருக்கும் போலீசாரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் காயம் அடைந்துள்ளனர். இருவரை விடுவித்துள்ளனர்’’ என்றும் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தால் புரட்சி ஏற்பட்டுள்ளது என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இது வதந்தி என்றும், வழக்கான வேலைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் என்று பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஆயுதமேந்திய குரூப்பில் உள்ள ஒருவன் ‘‘ஜனாதிபதி தனது பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும். ஜெயிலில் உள்ள எதிர்க்கட்சி தலைவரை விடுதலை செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கிடையே காவல் நிலையம் உள்ள இடத்தை போலீசார் மற்றும் ராணுவத்தினர் சுற்று வளைத்துள்ளனர்.

LEAVE A REPLY