(விசேட நிருபர்)
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு பொலனறுவை பிரதான வீதியில் ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியில் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கை போக்குவரத்து சபையின் ஏறாவூர் பஸ் டிப்போவுக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று குடை சாய்ந்ததில் 4 பேர் காயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
வாழைச்சேனையிலிருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த ஏறாவூர் டிப்போவுக்கு சொந்தமான பஸ் வண்டி ஆறுமுகத்தான் குடியிருப்பு வளைவில் குடை சாய்ந்துள்ளது.
இந்த விபத்தில் பயணிகள் நான்கு பேர் காயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இது தொடர்பாக ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.