ஜப்பானில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

0
92

201607171428057232_Earthquake-hits-Tokyo-and-eastern-Japan_SECVPFஜப்பானில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் டோக்கியோவில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் தஞ்சம் அடைந்தனர். அங்கு 5 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

டோக்கியோவுக்கு வட கிழக்கில் 44 கி.மீட்டர் தூரத்தில் 44 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள், சேத விவரங்கள் வெளியிடப்படவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை. நிலநடுக்கம் எற்பட்ட பகுதியில் தோகேய் என்ற இடத்தில் அணுமின் நிலையம் உள்ளது.

அது கடந்த 2011-ம் ஆண்டு மூடப்பட்டது. இருந்தாலும் நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY