அட்டாளைச்சேனை அப்துல் மனாப் எழுதிய ‘அர்த்தமானால்’ நூல் வெளியீட்டு விழா- சுகாதார அமைச்சர் பிரதம அதிதி

0
115

-சப்னி அஹமட்-

0e39782a-dafc-4d1b-93f8-13b90dfcf818அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், மருந்தாளருமான ஐ.எல்.அப்துல் மனாப் எழுதிய ‘அர்த்தமானால்’ என்ற சின்னக்கதைகள் நூல் வெளியீட்டு விழா இன்று (17) அட்டாளைச்சேனை கலாச்சார மண்டபத்தில் திருகோணமலை மாவட்ட நீதிபதி அப்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகான சுகாதார அமைச்சர் ஏல்.எல். முஹம்மட் நசீர் கலந்துகொண்டார்.

மேலும், இந்நிகழ்வின் அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல். ஏ. அஸீஸ், விரிவுரையாளர் அனீஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களான எஸ்.எம். ஏ. கபூர், பழீல் பீ.ஏ மற்றும் கவிஞர் ஆசுகவி அன்புடீன் உடபட பலர் இதன் போது கலந்துகொண்டு நூலின் பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.

LEAVE A REPLY