துருக்கி விமான சேவைகளை ரத்து செய்தது அமெரிக்கா

0
137

turkey_2935840fஅமெரிக்காவில் இருந்து துருக்கி செல்லும் அனைத்து விமானங் களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே போல், துருக்கியில் இருந்து அமெரிக்காவுக்கு விமானங்கள் இயக்குவதும் நிறுத்தப்பட்டுள் ளது.

அமெரிக்காவின் விமான போக்கு வரத்து நிர்வாக தலைமையகம் வெள்ளிக் கிழமை இரவே இதற்கான உத்தரவை பிறப்பித்து விட்டதாக தெரிவித்த அதிகாரிகள், இஸ்தால்புல் மற்றும் அன்காரா விமான நிலையங்களில் இருந்து நேரடியாகவோ, பிற நாடுகளின் வழியாகவோ அமெரிக்காவுக்கு எந்த விமானமும் இயக்கப்பட வில்லை என்றனர்.

அதேபோல், எந்த நாட்டு விமானமாக இருந்தாலும், வேறு நாடுகளின் வழியாக வருவதாக இருந்தாலும், துருக்கியில் இருந்து புறப்படும் எந்த விமானத்தையும் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடாடர்க் விமான நிலையத்தில் பாதுகாப்பு நிலைமை மிக மோசமாக இருப்பதால், தூதரக அதிகாரிகள் யாரும் விமான நிலையத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும், அமெரிக்க வெளியுறவுத் துறை எச்சரித்துள்ளது.

துருக்கியில் அதிருப்தி ராணுவ அதிகாரிகள் ராணுவப் புரட்சி யின் மூலம் ஆட்சியைப் பிடிக்க மேற்கொண்ட முயற்சியை வெற்றி கரமாக முறியடித்து விட்டதாக அதிபர் தாயிப் எர்டோகன் நேற்று அறிவித்தார். அதன் பிறகு துருக்கி யில் விமான நிலையங்கள் திறக்கப் பட்டாலும், அமெரிக்காவின் இந்த தடை அறிவிப்பு தொடர்ந்து அமலில் இருந்தது.

LEAVE A REPLY