சுவாதி ரமழான் நோன்பு இருந்தார்; முஸ்லிமாக மாற திட்டமிட்டிருந்தார்: திருமாவளவன் பரபரப்பு தகவல்

0
509

ramkumarகொலை செய்யப்பட்ட இன்போசிஸ் ஊழியர் சுவாதி, ரமழானில் நோன்பு இருந்தவர் என்றும், விரைவில் அவர் முஸ்லிமாக மாற திட்டமிட்டிருந்ததாகவும், இந்த கோணத்தில் விசாரணை நடைபெற வேண்டும் எனவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுவாதி கொலை வழக்கில் தினம் ஒரு திருப்பம் ஏற்பட்டுக் கொண்டுள்ளது. ராம்குமார் மட்டுமே குற்றவாளி என்று போலீசார் கூறியிருந்த நிலையில், திடீரென, சுவாதிக்கு நெருக்கமான நண்பர், முகமது பிலால் சித்திக் என்பவரிடம் போலீசார் 10 மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணை நடத்தினர்.

பிலால் செல்போன் நம்பருக்கு சுவாதி அதிக மெசேஜ்கள் அனுப்பியிருந்ததாகவும், அதில் தன்னை ஒரு நபர் பின் தொடர்வதாக சுவாதி கூறியிருந்ததாகவும், அதுபற்றி முகமது பிலால் சித்திக்கிடம் போலீசார் விசாரணை நடத்தியதாகவும் கூறப்பட்டது.

மேலும், ராம்குமாரை, பிலால் அடையாளம் காட்டியதாகவும் கூறப்பட்டது.

LEAVE A REPLY