ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஏறாவூரில் கஞ்சா விற்பணையில் ஈடுபட்ட வந்த நபர் ஒருவர் கஞ்சா பக்கட்டுக்களுடன் கைது

0
139

(விசேட நிருபர்)

Arrestமட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஏறாவூரில் கஞ்சா விற்பணையில் ஈடுபட்ட வந்த நபர் ஒருவரை இன்று (17.7.2016) ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட போதை வஸ்த்து ஒழிப்பு பிரிவு பொலிஸார் கைது செய்ததுடன் அவரிடமிருந்து கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதை வஸ்த்து ஒழிப்பு பொலிஸ் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் காயர் வீதியைச் சேர்ந்த ஜௌபர் ஜெஸீர்(33) எனும் சந்தேக நபர் ஏறாவூர் றிபாய் பள்ளிவாயல் வீதியின் முன்னாலுள்ள ஒழுங்கையில் கஞ்சா விற்பணை செய்து கொண்டிருந்த போது மட்டக்களப்பு மாவட்ட போதை வஸ்த்து ஒழிப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ.வஹாப் ஐ.பி. தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் ஜே.அலோசியஸ் உட்பட போதை வஸ்த்து ஒழிப்பு பொலிஸ் பிரிவு பொலிஸ் குழு மேற் கொண்ட திடீர் சுற்றி வளைப்பில் இவர் கைது செய்யப்பட்டதுடன் இவரிடமிருந்து 105கிறாமும் 450 மில்லி கிறாம் நிறை கொண்ட 60 கஞ்சா பக்கட்டுக்களை இதன் போது கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும் கது செய்த சந்தேக நபரையும் ஏறாவூர் பொலிசாரிடம் மட்டக்களப்பு மாவட்;ட போதை வஸ்த்து ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற் கொண்டு வருவதுடன் சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக எறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY