ஆசிய பசிபிக் மிடில் வெயிட் பட்டத்தை முகமது அலிக்கு சமர்ப்பிக்கிறேன்: விஜேந்தர் சிங்

0
112

201607170532480480_I-want-to-dedicate-my-WBO-win-to-Mohammad-Ali-Vijender-Singh_SECVPFஇந்தியாவின் விஜேந்தர் சிங் கலந்து கொண்ட ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் பட்டத்துக்கான தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டி தலைநகர் புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், விஜேந்தர் சிங் (30 வயது, 75.7 கிலோ) – ஆஸ்திரேலிய வீரர் கெர்ரி ஹோப்பை (34 வயது, 74.9 கிலோ) வீழ்த்தி பட்டம் வென்றார்.

வெற்றிக்கு பிறகு பேசிய விஜேந்தர் சிங், “எல்லாம் கடின உழைப்பு, இது நம்முடைய கனவு. இறுதியாக நாம் வென்று விட்டோம்.

இந்தியாவிற்கு நன்றி, இந்தியாவிற்கு அளவுகடந்த நன்றி. எல்லாம் நம்முடைய நாட்டிற்கே. போட்டியை காண வந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி.

நாக்-அவுட்டில் வெற்றி பெற நினைத்தேன். ஆனால் முடியவில்லை. 10-வது சுற்று வரை செல்லும் என்று நினைக்கவில்லை. உண்மையிலே கெர்ரி மிகவும் அற்புதமாக சண்டையிட்டார்” என்று கூறினார்.

மேலும், இந்த பட்டத்தை மறைந்த குத்துச் சண்டை ஜாம்பவான் முகமது அலிக்கு சமர்பிப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே வெற்றி பெற்ற விஜேந்தர் சிங்கிற்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY