ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனைக்கு வாய்ப்பு: துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன்

0
242

201607170528139586_Tayyip-Erdogan-Says-Turkey-May-Discuss-Death-Penalty-After_SECVPFதுருக்கி நாட்டில் இராணுவத்தினர் திடீரென ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டனர். இந்த முயற்சியில் இராணுவத்தினருக்கும், அரசு தரப்பு போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த தாக்குதலில் சுமார் 365 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

அதிபர் தயீப் எர்டோகன் இஸ்தான்புல் நகருக்கு ஓய்வெடுக்கச் சென்றிருந்த நிலையில் தலைநகர் அங்காராவில் ராணுவத்தின் ஒரு பிரிவினர் இத்தகைய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டனர்.

உடனடியாக இந்த முயற்சி முறியடிக்கப்பட்டதுடன் புரட்சியில் ஈடுபட்ட சுமார் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் தயீப் எர்டோகன், துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிப்பது குறித்த விவாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:-

இராணுவத்தில் உள்ள சிறு பிரிவினரால் ஆட்சி கவிழ்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட முயன்றவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கப்படும். அவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாராளுமன்றத்தில் சிலர் எழுப்ப வாய்ப்புள்ளது.

இராணுவம் நம்முடையது தான். துணை அமைப்பு கிடையாது. நான் தான் தலைமை கமாண்டர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, துருக்கி அதிபருக்கு ஆதரவாக இஸ்தான்புல் நகரில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தெருவில் இறங்கி ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் துருக்கிக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி ஊர்வலமாகச் சென்றனர்.

LEAVE A REPLY