துருக்கி ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை – பத்ஹுல்லாஹ் குலான்

0
83

141229105942_fethullah_gulen_624x351_bbc_nocredit-620x330துருக்கி ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என துருக்கியை விட்டு வெளியேறி பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழும் பத்ஹுல்லாஹ் குலான் மறுத்துள்ளார்.

75 வயதான அவர் இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை கடுமையாகக் கண்டித்துள்ளார். அரசு நிறுவனங்களுக்கு இணையான அமைப்பை உருவாக்க முயற்சித்ததாக துருக்கி அரசு பத்ஹுல்லாஹ் குலான் மீது குற்றஞ்சாட்டியுள்ளது. அவர் அந்தக் குற்றச்சாட்டுக்கள் தன்னை இழிவுபடுத்துவதாக விவரித்தார்.

போதகருக்கு எதிரான ஆதாரம் இருந்தால் அதை பகிரவேண்டும் என்று துருக்கியை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY