(Poem) ஆ…காரம்

0
63

(நிஷவ்ஸ்)

சிக்கன் உண்பவர்
sickல்
சிக்குவார்
சிக்கணமாய் உண்பவர்
சிக்கலின்றி வாழ்வார்.
சிகரட் குடிக்க
சிகரத்தில் ஏற்றும்
சீகரட் நோய் பின்
சீக்கிரம் அனுப்பும்.
எண்ணை உணவை
என்னேரமும் உண்பவர்
எண்ணற்ற நோய் வர
எண்ணி வருந்துவார்
தின்று, தின்ற பின்
திண்ணையில் நன்றாய்
தினமும் தூங்க
திண்ணமாய் நோய் வரும்.
கொத்திக் கொத்தி
கொத்துத் தின்ன
கொத்துக் கொத்தாய்
கொத்தும் நோய்கள்.

LEAVE A REPLY