இந்தியாவில் அசாமில் வெள்ளத்தால் 1.75 லட்சம் மக்கள் பாதிப்பு

0
144

201607161713142523_Flood-Situation-Worsens-In-Assam-175-Lakh-People-Affected_SECVPFஇந்தியாவில்அசாமில் தொடர்ந்து பெய்த கனமழையால் சுமார் 1.75 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கியமான ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பிரம்மபுத்திரா நதிக்கரையில் ஒட்டியுள்ள ஆறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டங்களை சேர்ந்த 1.75 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். லட்சுமிபூர்,கோலாகெட்,மோரிகான் உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கனமழையால் சுமார் 1.55 லட்சம் ஹேக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி போயுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மேலாண்மை குழுவினர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். சாலைகள் சேதமடைந்துள்ளதால் பல பகுதிகளில் போக்குவரத்து  துண்டிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY