கெயில், ஷக்கிப் அசத்தல் ; ஜமைக்கா டலவாஸ் வெற்றி

0
131

Kingston , Jamaica - 16 July 2016; Chris Gayle (L) and Imad Wasim (R) of Jamaica Tallawahs celebrate the dismissal of Chris Lynn of Guyana Amazon Warriors during Match 15 of the Hero Caribbean Premier League match between Jamaica Tallawahs and Guyana Amazon Warriors at Sabina Park in Kingston, Jamaica. (Photo By Randy Brooks/Sportsfile via Getty Images)

மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றுவரும் கரிபியன் பிரிமியர் லீக் தொடரின் இன்றைய  வொரியர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஜமைக்கா டலவாஸ் அணி 5விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

ஷக்கிப் ஹல் ஹசனின்  நிதானமான துடுப்பாட்டத்தின் உதவியுடன் இந்த வெற்றியை ஜமைக்கா டலவாஸ் அணி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய வொரியர்ஸ்  அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

வொரியர்ஸ் அணி சார்பில் மொஹமட்  2 ஆறு ஓட்டங்கள் , 1 நான்கு ஓட்டம் அடங்கலாக 46 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார்.பந்துவீச்சில் ஸ்டெயின் மற்றும் வசீம் அகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

129 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஜமைக்கா டலவாஸ்  அணி 15.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை பெற்று வெற்றியை பெற்றுக்கொண்டது.

இதில் ஷக்கிப் 7 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 54 ஒட்டங்களையும், கெயில் 4 ஆறு ஓட்டங்கள் 2 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 45  ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தன்வீர் 2 விக்கட்டுகளை கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக ஷக்கிப் ஹல் ஹசன் தெரிவு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY