எள்ளு உருண்டை செய்வது எப்படி

0
503

201607161418352518_How-to-make-a-sweet-ellu-urundai_SECVPFதேவையான பொருட்கள் :

எள்ளு – 200 கிராம்,
வெல்லம் – 200 கிராம்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
நெய் – 3 டீஸ்பூன்.

செய்முறை:

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றாமல் எள்ளை போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும்.

* வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டிய பின் மீண்டும் கொதிக்க வைத்து பாகு காய்ச்சவும். (ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு பாகை விட்டு, உருட்டினால் உருட்ட வர வேண்டும். அதுதான் பாகுக்கு சரியான பதம்).

* பதம் வந்ததும் வறுத்த எள்ளுடன் பாகு சேர்த்துக் கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, சற்று சூடாக இருக்கும் போதே கையில் சிறிது நெய் தடவிக்கொண்டு உருட்டவும்.

* சுவையான தித்திப்பான எள்ளு உருண்டை ரெடி.

குறிப்பு: வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு எள் மிகவும் நல்லது. இதை கருப்பு எள், வெள்ளை எள் இரண்டிலும் செய்யலாம்.

LEAVE A REPLY