பெற்றோர்கள் கல்விச் சமூகத்திற்கு வழங்குகின்ற ஒத்துழைப்பில் தான் தங்களுடைய பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி தங்கியுள்ளது: இரா.துரைரெட்ணம்

0
172

0113ab3b-ada9-4379-9ae6-2892bec456f5(வாழைச்சேனை நிருபர்)

பெற்றோர்கள் கல்விச் சமூகத்திற்கு வழங்குகின்ற ஒத்துழைப்பில் தான் தங்களுடைய பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி தங்கியுள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலய தொழில் நுட்ப ஆய்வு கூடம் நேற்று (15.07.2016) திறந்து வைக்கப்பட்ட  அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வித்தியாலய அதிபர் நா.சந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார், கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.போல், பிரதேச பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

அவர்; தொடர்ந்து உரையாற்றுகையில்.

அண்மையில் கதிரவெளி பிரதேச பாலர் பாடசாலை கட்டடம் அமைப்பதற்கான கூட்டம் நடைபெற்ற போது பெற்றோர்கள் வருகை தந்து தெரிவித்தார்கள் உங்களுடைய பணம் எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் ஆயிரம் ரூபாய் வீதம் போட்டு கட்டுவோம், போதாவிட்டால் தாருங்கள் என்றார்கள். பாருங்கள் இச்சமூகம் எவ்வளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்று.

தற்போது சில பெற்றோர்கள் தொலைக்காட்சியில் நாடகம் பார்கின்றனர். பிள்ளைகள் கல்வி கற்றுவிட்டு வந்ததால் நீங்கள் பிள்ளைகளையும் சேர்த்து நாடகம் பார்க்கின்றீர்கள். அதனை பார்த்து பிள்ளைகளின் கல்வி சீர்குலைகின்றது. அதனை நீங்கள் முதலில் திருத்திக் கொள்ள வேண்டும்.

தற்போது இப்பிரதேசத்தில் இடைவிலகளை பெற்றோர்கள் மாற்றியுள்ளீர்கள். அது மிகவும் சந்தோசமான விடயம். பிள்ளைகள் வீட்டிலும் கல்வி கற்பதற்கு பெற்றோர்களாகிய நீங்கள் அந்தச் சூழலை உருவாக்க வேண்டும்.

பெற்றோர்கள் பிள்ளைகளை ஆர்பாட்டத்தில் இறக்காமல் நீங்கள் இறங்க வேண்டும். பிள்ளைகளின் கல்வி நிலை பற்றி கேட்பதற்கு உங்களுக்கு உரிமையுள்ளது. அதற்காக பிள்ளைகளின் நிலையை மாற்றாதீர்கள் என்றார்.

LEAVE A REPLY