ஆய்வுகூட திறப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதி நிதிகள் கலந்து கொள்ளக்கூடாது: மக்கள் ஆர்ப்பாட்டம்

0
194

(வாழைச்சேனை நிருபர்)

46126282-9dd0-4c5e-bfe1-0877194386bbமட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்தில் பேத்தாளை விபுலானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்ட தொழிநுட்ப ஆய்வுகூடம் நேற்று (15.07.2016) திறக்கப்பட்ட நிலையில் அதனை திறப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதி நிதிகள் கலந்து கொள்ளக்கூடாது என்று பேத்தாளை பிரதேச பெற்றோர்கள் பாடசாலைகக்கு முன்பாக சுலோகங்களை ஏந்தி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

பேத்தாளை விபுலானந்தா வித்தியாலயம் ஆயிரம் பாடசாலையா தெரிவு செய்வதற்கு எதிர்த்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று என்ன முகத்துடன் திறப்பதற்கு வருகை தருகின்றீர், கூட்டமைப்பிற்கு மாலைக்கு ஆசையா, மரங்கொத்தி மரங்கொத்த கிளிப்பிள்ளை பெயர் எடுப்பதா போன்ற சுலோகங்களை ஏந்தி தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

எதிர்ப்பு தெரிவித்து சுலோகங்களை ஏந்தியவர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவிப்பதற்கு அனுமதி வழங்கிய கல்குடா பொலிஸார் அதிதிகள் வரும் போது அமைதியாக தங்களது எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க பெற்றோர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

9e2a462b-628b-4dd6-b4f5-1fd63fc3572d

91a93808-95a1-4ecc-946f-ea20b4b57384

247e46f8-faf6-4fbf-bb8e-5cf0350ead3c

7401804a-f465-44a0-8377-3a3379346729

46126282-9dd0-4c5e-bfe1-0877194386bb

LEAVE A REPLY