அரசியலுக்காக இனத்தையும் சமயத்தையும் காட்டி எமது பெறுமதிமிக்க நேரத்தை நாம் வீணடித்து விட்டோம்: பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

0
190

3b15bfde-2a02-46cd-8768-f19c8d09806c(வாழைச்சேனை நிருபர்)

நல்லாட்சி அரசாங்கத்தின் மக்கள் நல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மக்களின் காலடியில் கொண்டு செல்லும் நோக்கில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மாவட்ட காரியாலயம் மட்டக்களப்பு முதலியார் வீதியில் நேற்று முந்தினம் (14.07.2016) திறந்து வைக்கப்பட்டது.

பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஜோன்பாஸ்டர் தலைமையில் இடம் பெற்ற திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

“அரசியலுக்காக இனத்தையும்ரூபவ் சமயத்தையும் காட்டி எமது பெறுமதிமிக்க நேரத்தை நாம் வீணடித்து விட்டோம் இன்று திறக்கப்பட்டிருக்கின்ற எமது அலுவலகம் தேவையுடைய மக்களுக்கு உதவியாகவும் இன நல்லுறவு பயனத்தின் அஸ்திவாரமாக நிகழும் என்பதில் எவ்வித ஐயமும் மில்லை எனக்குறிப்பிட்டார்.

இதன் போது பிரதியமைச்சர் மக்களின் தேவைகள் பற்றி கேட்டறிந்ததுடன் உடன் தீர்வுகளையும் பெற்றுக் கொடுத்தார். இவ் அலுவலகம் வார இறுதி நாட்களை தவிர தொடர்ச்சியாக மக்களின் நலன் கருதி காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5மணி வரை திறந்திருக்கும் மக்களின் தீர்வு காணப்பட வேன்டிய நியாயமான பிரச்சினைகள் தொடர்பில் அதித கவனம் செலுத்தப்படும் என அமைச்சரின் இணைப்பாளர் ஜோன்பாஸ்டர் தெரிவித்தார்.

LEAVE A REPLY