அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்ற மன நிலை ஒவ்வொருவரது மனங்களில் இருந்தும் மாற வேண்டும்: எஸ்.தண்டாயுதபானி

0
143

(வாழைச்சேனை நிருபர்)

f4028a72-adac-45a7-ba74-0d6f0661b80fஅபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்ற மன நிலை ஒவ்வொருவரது மனங்களில் இருந்தும் மாற வேண்டும் அப்போதுதான் எம்மில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபானி தெரிவித்தார்.

கல்குடா கல்வி வலயத்தில் பேத்தாளை விபுலானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்ட தொழிநுட்ப ஆய்வுகூடத்தினை நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைத்து உறையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

அதிகாரத்தில் இருப்பவர் அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்து வைப்பது வழக்கம் அதன் பின்னர் அதன் வேலைகள் முடிவுற்றதன் பின்னர் அவர் இல்லாத சந்தர்ப்பத்தில் அவர்மூலம்தான் திறந்து வைக்க வேண்டும் என்று நினைப்பது அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முடிக்கும் செயற்திட்டமாகும் கடந்த அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்த வேலைத்திட்டங்கள் தற்போது முடிவுற்றுள்ளது, அதனை அவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தால் அபிவிருத்தி எங்கும் இடம் பெறாது.

இன்று நான் கல்வி அமைச்சராக இருந்து மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளேன் மாகாண சபை கலைந்ததன் பின்னர் நடைபெறும் தேர்தலில் நான் தோற்று விடலாம் அப்படி நடந்தால் நான்தான் அடிக்கல் நாட்டியவர் நான்தான் திறந்து வைக்க வேண்டும் என்று சொல்வது தவரான கருத்தாகும் அவ்வாறு  நடப்பது நாகரீகமும் அல்ல என்றும் தெரிவித்தார்.

கல்லூரி அதிபர் ரீ.சந்திரலிங்கம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பின்ரகளான எஸ்.யோகேஸ்வரன், ஜீ.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண அமைச்சர் கே.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் ஐ.பிரசன்னா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரட்ணம் மற்றும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY