ஸாக்கிர் நாயக்கிற்கு எதிரான கருத்து வெளியிட்ட மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம்!

0
259

(இந்தியாவில் இருந்து ஸாஜில்  வலையமைப்பின் ஊடகவியலாளர்  நதீம்)

718f7567-2505-4653-83d7-6cb5c15fa994டாக்டர் ஜாக்கிர் நாயக் பிரபல ஆங்கில நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸ் 2010ல் வெளியிட்ட சக்திவாய்ந்த 100 இந்தியர்களின் பட்டியலில் ஒருவராக இடம் பெற்ற உலகம் முழுவதும் அறியப்பட்ட இஸ்லாமிய அறிஞர் டாக்டர்.ஜாக்கிர் நாயக் மீது மத்திய அரசும், மராட்டிய மாநில அரசும், அவரை களங்கப்படுத்தியும், தீவிரவாதத்தோடு தொடர்பு படுத்தியும் கட்டவிழ்த்துள்ள அத்துமீறிய அவதூறுகளை கண்டித்து இன்று ஜூலை16 (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு தமிழக அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் A.K.முஹம்மது ஹனீபா தலைமை வகித்தார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் M. முஹம்மது சேக் அன்சாரி அவர்கள் முன்னிலை வகித்து மத்திய, மராட்டிய அரசுக்கு எதிரான கண்டனத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் பதிவு செய்தார்.

இதில் SDPI கட்சியின் மாநில தலைவர் K.K.S.M தெகலான் பாகவி, மனித நேய மக்கள் கட்சி தலைவர் M.H.ஜவாஹிருல்லாஹ், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில துணைத்தலைவர் குணங்குடி ஹனிபா, INTJ தலைவர் S.M.பாக்கர், மறுமலர்ச்சி முஸ்லீம் லீக் தலைவர் அ.ச.உமர் பாரூக், இந்திய தேசிய லீக் தலைவர் பசீர் அஹமது, வெல்பேர் பார்ட்டி தலைவர் S.N.சிக்கந்தர், முஸ்லீம் லீக் தலைவர் பாத்திமா முஸப்பர் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவர்கள் முன்னிலை வகித்து கண்டன உரை நிகழ்த்தினர்.

இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளும், செயல்வீரர்களும் கலந்துக்கொண்டு டாக்டர் ஜாக்கீர் நாயக்கிற்கு ஆதரவான கோசங்களையும் எழுப்பினர்.

டாக்டர் ஜாகிர் நாயக் மீதான மத்திய அரசு மற்றும் மராட்டிய அரசின் வெறுப்புணர்வு அரசியலை கண்டித்து நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சியின் தொண்டர்களும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் மத விரோத கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை கண்டித்து கோஷங்களும், பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தது.

cbv

cv

cxcc

LEAVE A REPLY