(Update) யாழ் பல்கலைக்கழகத்தில் மோதல்; நான்கு மாணவர்கள் காயம்

0
41

Jaffna University Clashயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இரு மாணவர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

இன்று இடம்பெற்ற விஞ்ஞான பீட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில், தமிழ் காலாச்சார முறையிலான நடனம் இடம்பெற வேண்டும் என்று ஒரு தரப்பினரும், கண்டிகால நாட்டியம் இடம்பெற வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் கூறியுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட வாய்தர்க்கம் அடிதடியாக மாறியுள்ளது.

காயமடைந்த நான்கு மாணவர்களும் சிங்கள மாணவர்கள் என்று கூறப்படுகிறது.

தற்போது பொலிஸார் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

LEAVE A REPLY