ஓட்டமாவடியில் சட்ட விரோத முதுரை மரங்கள் கைப்பற்றப்பட்டன

0
273

(வாழைச்சேனை நிருபர்)

05ஓட்டமாவடி பிரதேசத்தில் வைத்து சட்ட விரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட முதுரை மரங்களை வாழைச்சேனை பொலிஸார் இன்று (16) அதிகாலை கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய புலனாய்வுத்துறை உத்தியோகத்தர்களான எம்.பி.எம்.தாஹா மற்றும் எம்.டபள்யூ.தினுஸ ஆகியோருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து உப பொலிஸ் பரிசோதகர் ரீ.மேனன் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் ஓட்டாமாவடி பாலத்திற்கு அருகில் வைத்து இன்று அதிகாலை 01.30 மணியளவில் குறித்த லொரியையும் 21 முதுரை மரக்குற்றிகளையும் கைப்பற்றியுள்ளதுடன் அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

மீன் ஏற்றும் குளிரூட்டப்பட்ட லொரியில் மறைத்து வைத்து திருகோணமலை மாவிலாரு பகுதியில் இருந்து குறித்த மரங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.

02 03 04

LEAVE A REPLY