துருக்கியில் ஆட்சியை கைப்பற்ற ராணுவம் முயற்சி: வன்முறை வெடித்ததில் 90 பேர் பலி

0
140

imageதுருக்கியில் ஆட்சியைக் கைப்பற்ற ராணுவம் முயற்சித்ததைத் தொடர்ந்து வெடித்த வன்முறைகளில் இதுவரை 90 பேர் உயிரிழந்தனர். 1,154 பேர் காயமடைந்துள்ளதாக அரசு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

தலைநகர் அங்காராவில் கோல்பாசி மாவட்டத்தில் பொதுமக்கள் 42 பேரும், 17 போலீஸாரும் கொல்லப்பட்டதாகவும் அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தவிர துருக்கி நாட்டின் ஏவுகணைத் தளத்தின் இரண்டு ஊழியர்களும் கொல்லப்பட்டனர்.

1563 பேர் கைது:

அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களில் 1,563 பேரை அரசுப் படைகள் கைது செய்துள்ளன. இந்தத் தகவலை சி.என்.என் துருக்கி தெரிவித்துள்ளது. கைதான ராணுவ வீரர்களில் 29 பேர் கர்னல் பதவி அந்தஸ்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY