தென்னாபிரிக்க 19 வயதுக்குட்பட்ட அணியுடனான ஆட்டத்தில் தொடரை வென்றது இலங்கை

0
178

sl under 19இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள தென் ஆபிரிக்க, இலங்கை இளையோர் அணிகளுக்கிடையிலான போட்டித் தொடரில் இலங்கையின் 19 வயத்துக்குட்படந்தோர் அணி தொடரை வென்று அசத்தியுள்ளது.

முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்த தென் ஆபிரிக்க இளையோர் அணி, அதன் பின்னர் மீதமான இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவி தொடரை இழந்தது. தீர்மானம் மிக்க ‘காமினி திஸாநாயக்க’ தொடரின் இறுதி போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் தமிழ் பேசும் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சனோகீத் சண்முகநாதன், 19 வயதிற்குற்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் உப தலைவருமான சம்மு அஷான் ஆகியோர் ஜொலிக்க இலங்கைக்கு கிண்ணம் சொந்தமானது.

18 வயது சகலதுறை வீரர் சம்மு அஷான், ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்கள் குவித்து, 3 விக்கட்டுகளைக் கைப்பற்றி, 4 பிடிகளைப் பிடித்து சகல துறைகளிலும் அசத்தி போட்டியின் ஆட்ட நாயகன் மற்றும் தொடரின் ஆட்ட நாயகன் விருதுகளைத் தட்டிச்சென்றார்.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க 19 வயதிற்குற்பட்ட கிரிக்கெட் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க 19 வயதிற்குற்பட்ட அணி 9 விக்கட்டுகளைப் இழந்து 195 ஓட்டங்ககளைப் பெற்றது.

196 எனும் இலக்குடன் ஆடிய இலங்கை அணி கொஞ்சம் தடுமாறினாலும், கண்டி திரித்துவக் கல்லூரி மாணவன் சனோகீத் சண்முகநாதன் 66 பந்துகளில் 5 பவுண்டரிகள் உள்ளடங்களாக 41 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணிக்கு நம்பிக்கையூட்டினார். 5ஆவது விக்கட்டுக்காக சம்மு அஷான் மற்றும் பண்டார 100 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற இலங்கை அணி 196 எனும் வெற்றி இலக்கை இலகுவாகக் கடந்தது.

ஆட்ட நாயகன் சம்மு அஷான் 70 ஓட்டங்களையும் பண்டார 37 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இலங்கை 19 வயதிற்குற்பட்ட கிரிக்கெட் அணி 2-1 என்று தொடரை கைப்பற்றியது.

#Thinakaran

LEAVE A REPLY