(Poem) நியூட்டனின் நெகடிவ் விதிகள்

0
36

negativity(Mohamed Nizous)

எந்தவொரு பஸ்ஸையும்
எதிர்பார்த்திருக்கையில்
அந்த பஸ்ஸின்றி
அனைத்து பஸ்களும்
வந்து வந்து போவது
நொந்தவிதி எனப்படும்.

ஓஹோண்ணு இருந்த
ஒரிஜினல் சம்சுங்
ஆகவும் வேண்டிய
அவசர வேளையில்
சாகும் ஒலி எழுப்பி
சட்டென்று off ஆகல்
நோகும் உள்ளங்களில்
நொக்கியா வரும் விதி இது.

பெரிய டொக்டரை
பின்னேர பார்க்க
உரிய நேரத்துக்கு
ஒரு மணி முன்னே
சரியாய் போனால்
சாமத்தில் வருவதும்
ஒரு நாள் ஏனோ
ஒள்ளுப்பம் பிந்தினால்
அற சேர் கியா என்று
அங்கே கவுண்டரில்
சிரியாமல் சொல்லுவது
செய்த்தான் விதி எனப்படும்.

திரும்பத் திரும்ப
திருமதி சொன்னதை
வாங்க மறந்து
வாசலுக்கு வந்த பின்
ஙே என்று விழித்து
கெதியாய் ஓட
ஆங்கு கடைக்காரன்
அனுதாபமாய் நோக்க
ஈங்கு உரைத்தது
இம்சை விதியாகும்.

சாரிக்கு மெட்சாய்
சட்டைத் துணி வாங்க
ஏறி இறங்கி
இடுப்பு உடைந்தும்
ஏரியாவிலேயே
இல்லாத கலராய்
மாறுவது அத் துணி
மற்றுமொரு விதியாகும்.

போற வழியில
பொறுக்க முடியாது
தேரை போல் பாய்ந்து
தெறிக்க ஓடி
பூரப் போக
பூட்டி இருக்கும்
யாரோ ஒருவன்
இருமுவான் உள்ளே
ஆராய்ந்து சொன்னது
அவதி விதி எனப்படும்

நல்லா லேட்டாகி
நாம பதற
எல்லா சிக்னலும்
இருக்கும் சிகப்பாய்
நல்ல சொல்லொன்று
நாக்கினில் தோன்றும்
சொல்லியது இங்கே
சூடாக்கும் விதியாம்.

அடுத்தவன் ஆக்கத்தை
அப்படியே எடுத்து
கொடுத்தவன் பெயரை
எடுத்துப் போட்டு
எடுப்பாய் போஸ்ட் பண்ணி
எழுதியவனுக்க்கே Tag பண்ணும்
கொடுமையை நியூட்டன்
கோமாளி விதி என்றார்.

LEAVE A REPLY