மகிழ்ச்சியாக ஓய்வு பெறுவோரின் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் மெக்சிக்கோ

0
91

photoEscudo_Ciudad_de_Mexico_en_Semana_Santa_BELAS_ARTES_MAINசர்வதேச அளவில் மகிழ்ச்சியாக ஓய்வு பெறுவோரின் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் கனடா உள்ளது. இது குறித்து அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின்மூலமே இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

சர்வதேச அளவில் ஒப்பிடும் போது, கனடாவில் ஓய்வு பெறுவோரில் 72 சதவீதமானவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் பெருந்தொகையானவர்கள் தாம் ஓய்வு பெறுவதனையும் மகிழ்ச்சியான முறையிலேயே ஏற்றுக்கொள்கின்றனர்.

அதேபோன்று இங்கு ஓய்வு பெற்றவர்களில் அதிகமானவர்கள் தமது வாழ்க்கைச் செலவுகளையும், தமக்கு தேவையான தேவைகளையும் தாமே பூர்த்தி செய்துகொள்ளும் நிலைமையும் இருக்கின்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச அளவில் மகிழ்ச்சியாக ஓய்வு பெறுவோரின் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் மெக்சிக்கோ உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாக்கும்.

LEAVE A REPLY