ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் கொழும்பு கோட்டே நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2005-2006ம் ஆண்டு காலப்பகுதியில் மிக் ரக விமானக் கொள்வனவின் போது இடம்பெற்ற மோசடி குறித்து விசாரணை செய்ய இவ்வாறு கைது செய்யப்பட வேண்டிய தேவையிருப்பதாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு உதயங்கவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த அழைப்பாணை உத்தரவு உதயங்கவின் இலங்கை இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் உறவினர்களிடம் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2006ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையில் உதயங்க வீரதுங்க ரஸ்யாவிற்கான தூதுவராக கடமையாற்றியுள்ளார்.
உதயங்க தற்போது உக்ரேய்னில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.