இந்த ஆண்டில் இந்தியா திரும்ப மாட்டேன்: மதினாவில் இருந்தவாறு ‘ஸ்கைப்’ மூலம் ஜாகீர் நாயக்

0
123

201607152038147499_No-plans-to-return-to-India-this-year-Zakir-Naik_SECVPF‘‘இந்த ஆண்டில் இந்தியா திரும்ப மாட்டேன்’’ என்று ஜாகீர் நாயக் தெரிவித்து உள்ளார்.

மும்பையை சேர்ந்த ஜாகீர் நாயக்கின் பேச்சு டாக்கா தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு தூண்டுதலாக அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகீர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசை வங்காளதேச அரசு கேட்டு கொண்டது. மத்திய, மராட்டிய அரசுக்கள் விசாரித்து வருகிறது. ஜாகீர் நாயக்கின் போதனைகளை பரப்பும் ’பீஸ் டிவி’யும் சட்டவிரோதமாக செயல்படுவதாக தெரியவந்தது. இதற்கிடையே ஜாகீர் நாயக் விரைவில் இந்தியா திரும்ப உள்ளதாகவும், அப்போது அவரை கைது செய்ய வேண்டும் என்றும் சிவசேனா கட்சி வலியுறுத்தியது.

இதனிடையே, சவுதி அரேபியா நாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ள ஜாகீர் நாயக், ‘‘இந்த ஆண்டில் இந்தியா திரும்ப மாட்டேன்’’ என்று கூறிஉள்ளார்.

மதினாவில் இருந்தவாறு ‘ஸ்கைப்’ மூலம் ஜாகீர் நாயக் மும்பை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், என்னுடைய பயண திட்டப்படி, அடுத்த ஆண்டு தான் இந்தியா திரும்புவேன். இந்த ஆண்டில் இந்தியா வர மாட்டேன். பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு ‘ஸ்கைப்’ மற்றும் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பதிலளிப்பது வசதியாக இருக்கிறது. இதற்காக நான் ஓடி ஒளிவதாக கருதி விடாதீர்கள். முக்கியமான நபர்களை சந்திப்பதில், நான் மும்முரமாக இருக்கிறேன்.

இருந்தாலும், விசாரணை அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக இருக்கிறேன். என் மீது புனையப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்காக இதுவரையில் எந்தவொரு அரசு முகமையும் என்னை அணுகவில்லை. அவர்கள் அணுகினால், விசாரணைக்கு ஒத்துழைக்க தயார். எந்தவொரு தீவிரவாதியையும் நான் தூண்டியது கிடையாது. அப்பாவி மக்களை கொலை செய்வதற்கு இஸ்லாம் தடை விதிக்கிறது. தீவிரவாதம் மற்றும் தற்கொலை தொடர்பாக நான் தெரிவித்த கருத்துகள் திரித்து வெளியிடப்பட்டு விட்டன. நான் ஒரு சமாதான தூதன், என்று கூறிஉள்ளார்.

LEAVE A REPLY