மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின் முயற்சியால் கொங்ரீட் வீதியாக மாற்றமடையும் புல்மோட்டை பட்டிக்குடா வீதி

0
216

(அஹமட் இர்ஷாட், M.T. ஹைதர் அலி)

4கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வரின் வேண்டுகோளின் அடிப்படையில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சின் கீழ் இயங்கும் கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக சுமார் 8.5 மில்லியன் ரூபா செலவில் திருமலை மாவட்டத்தின் புல்மோட்டை பட்டிக்குடா வீதிக்கு 1 கிலோமீட்டர் வரையிலான கொங்ரீட் வீதி அமைப்பதற்காக நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீதியை மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர், கிழக்கு மாகாண கிராமிய திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் குச்சவெளி பிரதேச சபை செயலாளர் திரு. நிர்மலன், தொழில்நுட்ப உத்தியோகத்தர், குறித்த பகுதிக்கான கிராம சேவை உத்தியோகத்தர் திரு. அபூல் ஆகியோர் 2016.06.14ஆந்திகதி நேரில் சென்று வீதியினை பார்வையிட்டனர்.

1 3

LEAVE A REPLY