ஜாகீர் நாயக் நாட்டில் அமைதியை பரப்பினார்: காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்

0
167

201607151444089885_Dr-Zakir-Naik-has-spread-the-message-of-peace-in-the-nation_SECVPFஜாகீர் நாயக் நாட்டில் அமைதியை பரப்பினார் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் திக்விஜய் சிங் கூறிஉள்ளார்.

22 பேர் கொல்லப்பட்ட டாக்கா பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் பயங்கரவாத தாக்குதலுக்கு தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து வங்காளதேசம் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து இந்தியா விசாரித்து வருகிறது. வங்காளதேசம் ஜாகீர் நாயக்கின் பீஸ் டிவிக்கு தடை விதித்தது. மேலும், ’பீஸ் பள்ளிகள்’ தொடர்பாக வங்காளதேசம் விசாரணையை தொடங்கியது. இதற்கிடையே ஜாகீர் நாயக் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து உள்ளார்.

இதற்கிடையே 2012-ம் ஆண்டு ஜாகிர் நாயக் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கலந்து கொண்டதும், மேடையில் இருவரும் ஒன்றாக தோன்றிய விவகாரமும் பெரும் சர்ச்சையாகியது. நிகழ்ச்சியில் பேசிய திக்விஜய் சிங் ஜாகீர் நாயக்கை அமைதிக்கான தூதர் என்று புகழாரம் சூட்டியிருந்தார்.

இந்த சர்ச்சைக்கு மத்தியில் திக்விஜய் சிங் கூறுகையில்:- பயங்கரவாதத்துடன் ஜாகீர் நாயக்கிற்கு தொடர்பு உள்ளது தொடர்பாக ஆவணங்கள் இருப்பின் இந்தியா மற்றும் வங்காளதேசம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், என்று கூறினார்.

குற்றச்சாட்டு எழுந்து உள்ளநிலையில் ஜாகீர் நாயக் இந்தியாவிற்கு திரும்பாமல் வன்முறையை ஒருபோதும் தூண்டியது இல்லை என்று விளக்கம் அளித்து உள்ளார்.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக பேசிஉள்ள திக்விஜய் சிங், “ஜாகீர் நாயக் இந்தியாவில் அமைதிக்கான கருத்துக்களை பரப்பினார்,” என்று கூறிஉள்ளார். ஜாகீர் நாயக் நமது சட்டத்தை மீறி ஏதேனும் பேசியிருந்தால், மத்திய அரசும், மராட்டிய அரசும் வழக்குப்பதிவு செய்யாமல் பதுங்குவது ஏன்? என்று திக்விஜய் சிங் டுவிட்டரில் கேள்வி எழுப்பிஉள்ளார்.

LEAVE A REPLY