சகல இன மக்களுக்குமான பொதுவானதாக இந்த அலுவலகம் இயங்கும்: மட்டக்களப்பில் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

0
148

(அபூ செய்னப்)

unnamedசகல இன மக்களுக்குமான பொதுவானதாக இந்த அலுவலகம் இயங்கும். இது முஸ்லிமுக்குறியது, இது இந்துக்களுக்குறியது, இது சிங்களவருக்குறியது அல்லது இது கிரிஸ்தவர்களுக்குறியது என யாரும் அடையாளப்படுத்த முடியாது. சகல இனங்களையும், சகல மதங்களையும் கவனத்தில் கொண்டே எமது செயற்பாடுகள் அமையும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீரலி தெரிவித்தார்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் மட்டு மாவட்ட காரியாலயம் மட்டக்களப்பில்  (14/07/2016) பிரதி அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் பிரதியமைச்சரின் மட்டு மாவட்ட இணைப்பாளர் ஜோன் பாஸ்டர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரைநிகழ்த்தும் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

இந்த மாவட்டத்திலுள்ள மக்கள் உணர்வு பெறவேண்டும். மக்களின் நலனிற்காக பாடுபடுகின்ற தலைவர்களோடு இணைந்து செயற்படவேண்டும்.இங்கே அமைக்கப்பட்டுள்ள எமது கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கான மாவட்ட பணிமனையானது, இங்குள்ள மக்கள் தமது பிரச்சினைகளையும், தேவைகளையும் இலகுவில் தீர்த்துக்கொள்ளும் பொருட்டே அமைக்கப்பட்டுள்ளது. இங்கு யாருக்கும் பாரபட்சம் காட்டப்படமாட்டாது.

உங்களுக்காக அமைக்கப்பட்ட இந்த பணிமனையின் மூலம் நீங்கள் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இல்லையென்றால் உங்களது சிறியதொரு தேவைக்காகவும் நீங்கள் கொழும்புக்கு வரவேண்டும். அலைக்கழிய வேண்டும். உங்கள் காலத்தையும், நேரத்தையும், பணத்தையும் வீணடிக்க வேண்டும். இப்போது அந்தப்பிரச்சினை உங்களுக்கு இல்லை.

இந்தப் பணிமனை மட்டக்களப்பில் அமைக்க பெரும் கரிசனையோடு செயற்பட்டவர். எனது மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஜோன் பாஸ்டர். கடந்த காலங்களிலும் சரி,இப்போதும் சரி அவர் மக்கள் நலன் பற்றியே என்னுடன் பேசுவார். இந்த மாவட்டத்து மக்களுக்கு உயர்ந்த சேவையினை வழங்க வேண்டுமென்பதே அவரது பேரவாவாகும்.

எனவே இந்தப் பணிமனை மூலம், எமது மாவட்ட மக்களுக்கு சிறந்த முறையில் பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் ஆழமாக உள்ளது. நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள் இந்த மாவட்டத்திலுள்ள இணங்காணப்பட்ட பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வினை பெற்றும் தருகின்ற முயற்சியிலேயே நாம் இறங்கியுள்ளோம் அது வெகு விரைவில் சாத்தியப்படும். எல்லாம் ஒரு தடவையில் நடக்கும் என்றில்லை. ஒவ்வொறு அபிவிருத்தி செயற்பாடும் கட்டம்கட்டமாக இடம் பெறும். நல்லதே நடக்க வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை புரியுங்கள் என அவர் கூறினார்.

LEAVE A REPLY