(Photos) காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு Wifi வசதியுடன் சொகுசு பஸ் சேவை: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்ப்பு

2
59

(முஹம்மட் பயாஸ்)

Driver Hizbullahகாத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் நவீன வசதிகளுடனான சொகுசு பஸ் சேவை இன்று (15) காத்தான்குடியில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் முதலாவது பயணத்தினை மீழ்குடியேற்ற புனர்வாழ்வு, புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்று அங்குரார்ப்பனம் செய்து வைத்தார்.

48 ஆசனங்களை உள்ளடக்கிய இவ் பஸ் சேவை பல நவீன வசதிகளை கொண்டமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.

அதாவது இதில் பயணிக்கும் ஒவ்வொரு பயணிக்கும் ஒவ்வொரு தண்ணீர் போத்தல் இலவசமாக வழங்கப்படும். அதே போல் இலவச “Wifi” வசதிகள் மற்றும் கையடக்கத்தொலை பேசிகளை சார்ஜ் செய்யும் வசதிகள் என ஏறாளமான வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே இச்சேவை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ச்சியாக தனது சேவையை பயனிகளுக்கு வழங்கவுள்ளது.

இச்சேவை MAHA XPRESS எனும் பெயர் நாமத்தில் செயற்படவுள்ளது.

WhatsApp-Image-20160715 (1) WhatsApp-Image-20160715 (2) WhatsApp-Image-20160715

2 COMMENTS

LEAVE A REPLY