சுவாதியை மிரட்டுவதற்காகவே ரயில் நிலையம் சென்றேன்: ராம்குமார் வாக்குமூலம்

0
166

ramkumarசுவாதியை மிரட்டுவதற்காகவே அன்றைய தினம் ரயில் நிலையம் சென்றேன் என்று இன்போசிஸ் பெண் ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள ராம்குமார் கூறியுள்ளார்.

ஜூன் 24ம் தேதி காலை 6.30 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் நிறுவன மென்பொறியாளர் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ராம்குமார் கூறியதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை மிரட்டுவதற்காகவே சென்றேன். ஆனால், அப்போது அவர் பேசிய பேச்சு என்னை ஆத்திரமூட்டியதால், பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து கொலை செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

விசாரணை நடைபெறும் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY